TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 21 , 2023 585 days 282 0
  • 2023 ஆம் ஆண்டு புத்தாக்க மற்றும் தொழில்முனைவோர் விழா (FINE) 2023 அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான தேசியப் புத்தாக்க அறக்கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • FedEx என்ற நிறுவனத்தின் இந்திய-அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜ் சுப்ரமணியத்திற்கு மதிப்பு மிக்க பிரவாசி பாரதிய சம்மான் என்ற விருது வழங்கப் பட்டு உள்ளது.
    • இந்திய வம்சாவளி மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு இந்திய அரசு வழங்கும் மிக உயரியக் குடிமை விருது இதுவாகும்.
  • சமீபத்தியத் தரவுகளின்படி, ஐக்கிய அரபு அமீரகமானது, அமெரிக்காவிற்கு அடுத்த படியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமாகவும், சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய இறக்குமதி மூலமாகவும் உள்ளது.
  • மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் மற்றும் சர்வதேசப் பௌத்தக் கூட்டமைப்பு ஆகியவை புத்தமதம் குறித்த முதலாவது சர்வதேச உச்சி மாநாட்டைப் புது தில்லியில் ஏற்பாடு செய்தன.
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர், நாடு முழுவதும் உள்ள இளம் தொழில் முனைவோரின் புத்தொழில் நிறுவனங்களை ஒன்றிணைத்து அடையாளம் காண உதவும் நோக்கிலான 'யுவா' என்ற ஒரு இணையத் தளத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • மகாராஷ்டிரா அரசானது, V.D. சாவர்க்கரின்  பிறந்த நாளான மே 28 ஆம் தேதியினை ‘சுதந்திரிய வீர் கௌரவ் தினமாக’ கொண்டாட உள்ளது.
  • OpenAI மற்றும் கூகுள் நிறுவனத்தின் டீப் மைண்ட் ஆகியவற்றிற்கு இணையான ஒரு போட்டியாக "TruthGPT" செயற்கை நுண்ணறிவு முன்னெடுப்பினைத் தொடங்குவதற்கு எலோன் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
  • மொசாம்பிக்கில் அமைக்கப்பட்டுள்ள புஷி என்ற ஒரு பாலத்தினை இந்திய வெளியுறவு விவகாரங்கள் அமைச்சர் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.
    • இது 132 கி.மீ. நீள டிகா-புஷி-நோவா-சோஃபாலா சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசினால் கட்டமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்