TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 23 , 2023 455 days 237 0
  • சிட்டி யூனியன் வங்கியானது (CUB), தனது கைபேசி அடிப்படையிலான வங்கிச் சேவைச் செயலிக்காக இந்தியாவில் முதல் முறையாக பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக என்று குரல் சார்ந்த உயிரியல் அளவியல் அங்கீகரிப்பு வங்கிச் சேவைச் செயலியினை அறிமுகப் படுத்தி யுள்ளது.
  • 20 வயதிற்குட்பட்டோருக்கான FIFA உலகக் கோப்பைப் போட்டியினை நடத்துவதற்காக இந்தோனேசியாவிற்கு வழங்கிய உரிமையினை FIFA அமைப்பு திரும்பப் பெற்றதை அடுத்து, இப்போட்டியினை அர்ஜென்டினா நடத்த உள்ளது.
  • இந்தியப் பசுமை ஆற்றல் கூட்டமைப்பு - அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு உற்பத்தியாளர் மன்றமானது, அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு தொடர்பான இரண்டு நாட்கள் அளவிலான உலக மாநாட்டினைப் புது டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளது.
    • இந்த நிகழ்விற்கான கருத்துரு, "ஒரு வலுவான அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு உற்பத்திக்கான அடித்தளம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கான முற்போக்கான கொள்கைக் கட்டமைப்பினை நோக்கி" என்பதாகும்.
  • இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனையான நிகாத் ஷரீன் 50 கிலோ எடைப் பிரிவுப் போட்டியில் வியட்நாம் நாட்டினைச் சேர்ந்த குயென் தி டாம் என்பவரை வீழ்த்தி தனது இரண்டாவது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றார்.
    • மேரி கோமிற்கு அடுத்தபடியாக இந்தப் பட்டத்தினை இரண்டு முறை வென்ற இரண்டாவது இந்தியர் இவரே ஆவார்.
  • ஜெர்மனியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலா மெர்க்கல், 16 ஆண்டுகள் ஜெர்மனியின் தலைமைப் பொறுப்பினை வகித்ததனை அங்கீகரிக்கும் விதமாக, ஜெர்மனியின் மிக உயரிய கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்