TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 24 , 2023 582 days 294 0
  • தமிழக அரசானது, இந்த ஆண்டில் ஆளுநருக்கான விருப்புரிமை நிதி ஒதுக்கீட்டினை 5 கோடி ரூபாயில் இருந்து 3 கோடி ரூபாயாக குறைக்கவுள்ளது.
  • தமிழ்நாடு அரசானது, 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் 21/2012) திருத்தியமைப்பதற்கான மசோதாவினை சட்ட சபையில் தாக்கல் செய்துள்ளது.
    • இது துணைவேந்தரை நியமிப்பதற்கான அதிகாரத்தினை மாநில ஆளுநருக்குப் பதிலாக மாநில அரசிடம்  வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தமிழகத்தின் உச்ச கட்ட மின் தேவையானது, ஏப்ரல் 19 ஆம் தேதியன்று 19,087 மெகா வாட் என்ற அளவினை எட்டி முதன்முறையாக 19,000 மெகாவாட் என்ற அளவினைத் தாண்டியது.
  • இந்தியத் தேர்தல் ஆணையமானது, எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை அ.தி.மு.க. கட்சியின் பொதுச் செயலாளராக அங்கீகரித்துள்ளது.
  • ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான டிம் குக், இந்தியாவின் முதல் ஆப்பிள் தயாரிப்புகளின் சில்லறை விற்பனைக் கடையை மும்பையில் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்