TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 1 , 2023 447 days 299 0
  • தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) ஆனது, திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள டாலர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு நான்கு மெகா வாட் மணி நேரம் (MWhr) என்ற மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பினை (BESS) அமைப்பதற்காக முதன்முறையாக அனுமதி அளித்துள்ளது.
  • ஆற்காடு நவாப் முகமது அப்துல் அலிக்கு சென்னை அமீர் மஹாலில் நடைபெற்ற விழாவில் மகத்தானச் சேவைக்கான இந்தோ-ஆஸ்திரேலிய விருது வழங்கப்பட்டது.
  • காரைக்குடியில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான வருமான வரித்துறைக் கட்டிடமானது, புதுப்பிக்கப் பட்டு இந்தியாவிலேயே முதன்முறையாக வரி அருங் காட்சியகமாக மாற்றப் படவுள்ளது.
  • சென்னை மேயர் R.பிரியா, மே 03 ஆம் தேதியன்று சென்னை ராயபுரத்தில் இருந்து ‘மக்களைத் தேடி மேயர்’ என்ற திட்டத்தினைத் தொடங்கி வைக்க உள்ளார்.
    • இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை நகரத்திலுள்ள 15 மண்டலங்களுக்கும் மேயர் சென்று, அந்த மண்டலத்தில் உள்ள குடிமைப் பிரச்சனைகள் தொடர்பான மனுக்களைப் பெற அங்கு வசிப்பவர்களைச் சந்திக்க உள்ளார்.
  • இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் சென்னை கிண்டியில் புதிதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளப் பல்நோக்கு மருத்துவமனையினை ஜூன் 05 ஆம் தேதியன்று திறந்து வைக்க உள்ளார்.
  • சச்சின் டெண்டுல்கரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் உள்ள மேற்குப் புற பார்வையாளர் மேடைக்கு 'சச்சின் டெண்டுல்கர் மேடை' என்று பெயரிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்