TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 2 , 2023 446 days 254 0
  • புது டெல்லியில் நடைபெற்ற 6வது ‘ஒரு பூமி ஒரு சுகாதாரம் – நன்மை பயக்கும் இந்திய சுகாதார நலன் – 2023’ என்ற ஒரு நிகழ்ச்சியினைப் பிரதமர் தொடங்கி வைத்து உரை ஆற்றினார்.
  • இந்திய மின் கட்டமைப்புக் கழக லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு (PGCIL), கிரீன் ஆர்கனைசேஷன் என்ற அமைப்பினால் குளோபல் கோல்டு என்ற விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • ஜடன் பரியாட், கடந்த ஆறு ஆண்டுகளில், பிரிட்டிஷ் F4 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • ரிலையன்ஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனமானது தனது தவணைகளை செலுத்தச் செய்வதற்காக வேண்டி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட மத்திய வங்கியின் எண்ணிம நாணயமான இணைய வழி-ரூபாயினை ஏற்றுக் கொண்ட முதல் காப்பீட்டு நிறுவனம் ஆகும்.
  • 2022 ஆம் ஆண்டில் ஆசிய மேம்பாட்டு வங்கியின் (ADB) நிதியளிப்புத் திட்டங்களை அதிகளவில் பெற்ற நாடாக பாகிஸ்தான் மாறியுள்ளது.
    • ஆசிய மேம்பாட்டு வங்கியின் 2022 ஆம் ஆண்டு வருடாந்திர அறிக்கையின் படி, 40 நாடுகளுக்கான 31.8 பில்லியன் டாலருக்கும் அதிகமான அளவில் நிதித் தொகை வழங்கீட்டில், பாகிஸ்தான் மட்டும் 5.58 பில்லியன் டாலர் கடனைப் பெற்றுள்ளது.
  • ஆஸ்திரேலியா, மூன்றாவது நேரடி குவாட் உச்சி மாநாட்டினை சிட்னியில் மே 24 ஆம் தேதியன்று நடத்த உள்ளது.
    • நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை அமைப்பானது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்