TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 5 , 2023 443 days 270 0
  • தமிழ்நாடு காவல்துறையின் உளவுப் பணிப் பிரிவில் 380 பணியாளர்களைக் கொண்ட ‘தீவிரவாத எதிர்ப்புப் படைப்பிரிவானது’  57.51 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • மத்திய அரசானது, புது டெல்லியில் இந்தியாவின் முதல் "சிறுதானியங்கள் அனுபவ மையத்தினை (MEC)" நிறுவியுள்ளது.
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது திறன்மிகு நகரங்கள் திட்டத்திற்கான காலக்கெடுவினை 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
  • மோகன்தாஸ் கரம்சந்ந் காந்தி அவர்களின் பேரன் அருண் காந்தி சமீபத்தில் காலம் ஆனார்.
  • சித்தார்த்த மொகந்தி, 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்திற்கு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய ஒலிம்பிக் சங்கமானது, இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் அன்றாட விவகாரங்களை மேற்கொள்வதற்காக, பூபேந்தர் சிங் பஜ்வா மற்றும் சுமா ஷிரூர் ஆகியோரை உள்ளடக்கிய இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தற்காலிகக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
  • டிங் லிரன், ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி என்பவரை வீழ்த்தி, சீனாவின் முதல் ஆடவர் உலக செஸ் சாம்பியன் ஆனார்.
  • முதலாவது ஆசியான்-இந்திய கடல்சார்ப் பயிற்சி (AIME) சமீபத்தில் தென் சீனக் கடலில் தொடங்கியது.
  • சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் பழங்குடியினர் பிரச்சினைகள் தொடர்பான நிரந்தர மன்றத்தின் 22வது அமர்வு நியூயார்க் நகரில் நடைபெற்றது.
    • இந்த நிகழ்வின் கருத்துரு: "பழங்குடி மக்கள், மனித சுகாதாரம், கிரகங்கள் மற்றும் பிராந்திய ஆரோக்கியம் மற்றும் பருவநிலை மாற்றம்: உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறை" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்