சுமார் 35,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கும் தொழில்துறை சார் திட்டங்களுக்குத் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
2023 முதல் 2033 ஆம் ஆண்டு வரையில், ஆடவர் மற்றும் மகளிர் இந்திய ஹாக்கி அணிகளுக்கு (மூத்தப் பிரிவினர் மற்றும் இளையோர்) தனது நிதியளிப்பினை மேலும் பத்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு ஒடிசா அரசாங்கமானது முடிவு செய்துள்ளது.
கோ ஏர்லைன்ஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனமானது (Go First), தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் (NCLT) தன்னார்வ திவால் நடவடிக்கைகளுக்காக தாக்கல் செய்து உள்ளது.
"செயற்கை நுண்ணறிவின் ஞானப் பிதா" என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் கூகுள் நிறுவனத்தில் வகித்த தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
வோடபோன் குழுமமானது இத்தாலி நாட்டினைச் சேர்ந்த மார்கெரிட்டா டெல்லா வாலேவை அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமித்துள்ளது.