TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 8 , 2023 440 days 237 0
  • புது டெல்லியில் அமைந்துள்ள இந்திய வெளிநாட்டு வர்த்தகக் கல்வி நிறுவனம் (IIFT) ஆனது, அதன் 60வது நிறுவன தினத்தில் தனது வைர விழாவைக் கொண்டாடியது.
    • இது 1963 ஆம் ஆண்டில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது.
  • உத்தரப் பிரதேச அரசானது, டிஸ்னிலேண்டின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு "ராமாலேண்ட்" என்ற கருத்துரு சார்ந்த ஒரு கேளிக்கைப் பூங்காவினை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
    • இராமர் மற்றும் இராமாயணத்தின் புராணக் கதைகளை விவரிப்பதை இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பானது சமீபத்தில் கோவாவில் நடைபெற்றது.
    • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்திற்கான கருத்துரு ‘SECURE-SCO’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்