TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 9 , 2023 567 days 294 0
  • டாக்டர் B.R. அம்பேத்கர் என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்ட தெலுங்கானா மாநில அரசின் தலைமைச் செயலக வளாகமானது சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது.
    • இந்தக் கட்டிடமானது, பொதுவாக இந்தோ-இஸ்லாமியக் கட்டிடக்கலை அம்சமான குவிமாடங்களுடன் கூடிய இந்தோ-சார்செனிக் பாணியில் காணப்படும் ஒரு தனித்துவமான கட்டிடக் கலையைக் கொண்டுள்ளது.
  • இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு வலுவான பிணைப்பினைக் குறிக்கும் வகையில் மொரீஷியஸ் நாட்டில் அமைந்துள்ள மகாராஷ்டிர பவனில் அமைக்கப்பட்டுள்ள மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் 12 அடி உயரச் சிலையானது திறக்கப் பட்டுள்ளது.
  • இந்திய இராணுவமானது சமீபத்தில் புலந்த் பாரத் என்று பெயரிடப்பட்ட ஒரு பிரிவுசார் ஒருங்கிணைந்தப் பயிற்சியினை அருணாச்சலப் பிரதேசத்தில் மேற்கொண்டது.
  • அசாமில் உள்ள ஜோகிகோபா எனுமிடத்தில், பாரத்மாலா திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் சர்வதேசப் பல்முனைத் தளவாடங்கள் பூங்கா உருவாக்கப்பட உள்ளது.
  • தேசிய அனல் மின் கழகமானது, வங்காளதேசத்தில் அதன் முதல் வெளிநாட்டுத் திறன் உற்பத்தி மையத்தினை நிறுவியுள்ளது.
    • இந்தப் புதிய உற்பத்தி மையமானது, தேசிய அனல் மின் கழகத்தின் நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனை 72304 MW ஆக உயர்த்தியுள்ளது.
  • அஜய் பங்கா உலக வங்கியின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்பார் என்றும், 2023 ஆம் ஆண்டு ஜூன் 02 ஆம் தேதி முதல் ஐந்தாண்டுக் காலத்திற்கு அதன் தலைவர் பொறுப்பினை வகிப்பார் என்றும் அதன் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
  • உலக சிரிப்புத் தினம் என்பது சிரிப்பு மற்றும் அதன் பல குணப்படுத்தும் நன்மைகள் பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்