TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 10 , 2018 2333 days 771 0
  • துருக்கி நான்கு வழித்துணைக் கப்பல்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய உள்ளது. இது துருக்கியின் மிகப்பெரிய ஒற்றை ஏற்றுமதி ஒப்பந்தமாகும். கடந்த ஆண்டு மில்ஜெம் (MiLGEM) திட்டத்தின் கீழ் நான்கு வழித்துணைக் கப்பல்களைத் தயாரிக்க பாகிஸ்தானுடன் துருக்கி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இரண்டு வழித்துணைக் கப்பல்கள் இஸ்தான்புல்லில் தயாரிக்கப்படும். மீதமுள்ள இரண்டு வழித்துணைக் கப்பல்கள் பாகிஸ்தானின் கராச்சியில் தயாரிக்கப்படும்.
  • மாநிலத்தில் ஏற்படும் பயணச் செலவுகளைக் குறைக்க அமைச்சர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு ‘ஒரு நபர் ஒரு ஊர்தி’ என்ற புதுத் திட்டத்தை மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
  • மேலும் உள்நாட்டில் நடுத்தர வகுப்பில் பயணம் செய்யும் அனைத்து உள்நாட்டு பயணங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவை முதல்வரின் ஒப்புதலைப் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • ஜப்பானின் டோக்கியோவில் உள்ள மோரி டிஜிட்டல் கலை அருங்காட்சியக கட்டிடத்தில் உலகின் முதல் டிஜிட்டல் கலை அருங்காட்சியகம் துவங்கப்பட்டுள்ளது.
  • அரியானா முதல்வர் மனோகர் பால் கட்டார் "சாயி பீ சர்ச்சா" அல்லது தேநீர் மீதான விவாதம் என்ற பரப்புரையை துவக்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
  • இந்தியாவின் முதன்மையான மென்பொருள் சமூகமான தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களில் சங்கம் (NASSCOM), பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவிற்காகவும் தகவல் அறிவியலுக்காகவும் சிறப்பு மையம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
  • மத்திய கலாச்சாரத் துறை இணையமைச்சர் டாக்டர்.மகேஷ் சர்மா, புதுதில்லியில் உள்ள IGNCA மையத்தில் “Arth - Art for Earth” என்ற தலைப்பிலான கண்காட்சியை துவக்கி வைத்துள்ளார்.
    • ‘ARTH - Art for Earth’ (பூமிக்கான கலை) என்பது மானவ் குப்தாவின் “களிமண்ணின் புகழை கொணரும் அகழ்வுகள்” என்ற தலைப்பில் பொருள்படும். சுற்றுப்புறச்சூழல் பற்றிய கலைப் படைப்புகளின் தொகுப்பு மானவ் குப்தாவால் கலை நயம் மற்றும் இலக்கியத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது.
  • ரயில்வே ஆணைப் பத்திரத்திற்குப் பதிலாக IRCTCயுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டு மின்னணு பயணச்சீட்டு (e-Ticketing) முறைக்கு மாறிய முதல் மத்திய துணைப் பாதுகாப்புப் படையாக தேசிய பாதுகாப்புப் படை (National Security Guard - NSG) உருவெடுத்துள்ளது. இந்த முறை NSG வீரர்கள் ரயில்வே ஆணைப் பத்திரத்தை கையில் வைத்துக் கொள்வதை தவிர்த்திட உதவும்.
    • IRCTC மத்திய ரிசர்வ் காவல் படைக்காக (Central Reserve Police Force - CRPF) ஆணைப் பத்திரத்துடன் கூடிய மின்னணு பயணச்சீட்டு முறையையும் மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது.
  • 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்ற நீதியரசர்நரசிம்ம ரெட்டி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் (Central Administrative Tribunal - CAT) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • நீதியரசர் ரெட்டி, நீதியரசர் தினேஷ் குப்தாவிடம் இருந்து பதவியை பெற்றுக் கொள்வார். மேலும் இவர் இப்பதவியை மூன்றாண்டு காலத்திற்கு வகிப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்