ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனமானது, தமிழ்நாட்டில் சென்னை அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டை எனுமிடத்தில் அமைந்த தனது ஆலையில் புதிய மின்சார வாகன (EV) வடிவ மாதிரிகளை அறிமுகப் படுத்துவதற்காகவும், அந்த ஆலையின் உற்பத்தி அளவினை அதிகரிப்பதற்காகவும் வேண்டி அடுத்த 10 ஆண்டுகளில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக உறுதியளித்துள்ளது.
பரந்தூரில் நிறுவப்பட உள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான மாபெரும் திட்டம் மற்றும் விரிவான தொழில்நுட்பப் பொருளாதார அறிக்கையினை உருவாக்குவதற்கான ஒரு ஆலோசனை நிறுவனமாக லூயிஸ் பெர்கர் தேர்வு செய்யப் பட்டுள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் விருதினை வழங்கிக் கௌரவித்தார்.
நோபல் பரிசு பெற்ற ரவீந்திர நாத் தாகூர் அவர்களின் இல்லமான மேற்கு வங்கத்தில் உள்ள சாந்தி நிகேதனை யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்ப்பதற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் வில்வித்தை வீரர் அதானு தாஸ், இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் (MYAS) ஒலிம்பிக் போட்டி இலக்குத் திட்டத்தில் (TOPS) மீண்டும் சேர்க்கப்பட்டார்.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கி சாரா நிதி நிறுவனமான, ஆற்றல் நிதிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக (CMD) பர்மிந்தர் சோப்ரா நியமிக்கப் பட்டு உள்ளார்.
மகாரத்னா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப் படும் முதல் பெண்மணி சோப்ரா ஆவார்.