GMR ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் ஆனது 90.43 சதவிகிதம் வரையில் மிகவும் சரியான ஒரு நேரத்தில் செயல்படுவதனால் உலகிலேயே மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் விமான நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வாரணாசியில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையமானது, இந்தியாவிலேயே முதன்முதலாக வாசிப்பு அறையை நிறுவியுள்ளது.
"Droupadi Murmu: From Tribal Hinterlands to Raisina Hills" என்ற தலைப்பிலான ஒரு புத்தகத்தினை கஸ்தூரி ரே எழுதியுள்ளார்.
‘The Indian Metropolis: Deconstructing India’s Urban Spaces’ என்ற புத்தகத்தினை ஃபெரோஸ் வருண் காந்தி எழுதியுள்ளார்.
காஷ்மீர் பல்கலைக்கழகம் ஆனது பருவநிலை மாற்றம் குறித்த இரண்டு நாட்கள் அளவிலான இளையோர் 20 என்ற நிகழ்ச்சியினை (Y20) நடத்தவுள்ளது.
இந்த இளையோர் 20 நிகழ்வின் கருத்துரு, "பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு: நிலைத்தன்மையை வாழ்க்கை முறையாக்குதல்" என்பதாகும்.
வங்காளதேச அரசானது சமீபத்தில் 6வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டினை (IOC) நடத்தியது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் (கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்) தலைவர்களுடன் இணைந்து இரண்டு நாட்கள் அளவிலான உச்சி மாநாட்டினை நடத்த உள்ளார்.