TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 19 , 2023 429 days 234 0
  • வேலூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் வேந்தரான G. விஸ்வ நாதனுக்கு, சர்வதேச அளவிலான கல்விக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பிற்காக வேண்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
    • இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் பாராளுமன்றத்ததின் பொது மக்கள் சபையில் உலகத் தமிழ் கழகம் இதனை வழங்கியுள்ளது.
  • சென்னையில் அமைந்துள்ள இந்திய இரயில்வே உணவு வழங்கீடு மற்றும் சுற்றுலாக் கழகத்தின் தென் மண்டல நிர்வாகமானது, ஷீரடி சாய்பாபா கோயில், நாசிக், பந்தர்பூர் மற்றும் மந்திராலயம் ஆகியப் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் பாரத் கௌரவ் சுற்றுலா இரயிலினை இயக்க உள்ளது.
    • இதற்கு "ஷீரடி சாய் தரிசனம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • கர்நாடகக் காவல்துறைத் தலைமை இயக்குநரான பிரவீன் சூட் மத்தியப் புலனாய்வுத் துறையின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பச் சபையின் முதலாவது அமைச்சர்கள் கூட்டமானது பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்