18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பேங்கில் ஆகஸ்ட் 2018-ல் தொடங்கவிருக்கிறது. 18 பேர் கொண்ட இந்திய ஆண்களுக்கான ஹாக்கி அணியின் குழுவிற்கு இந்திய அணியின் கோல்கீப்பர் பி. ஆர்.ஸ்ரீஜேஷ் தலைமை வகிப்பார். ஜிங்லென்சானா சிங் கன்குஜாம் அதன் துணைத் தலைவராக செயல்படுவார்.
சமீபத்திய இந்தியாவின் முன்னணி போர் கப்பலான ஐஎன்எஸ் திரிகாந்த் (INS Trikand) நல்லெண்ணப் பயணமாக ஸ்ரீலங்கா சென்றடைந்தது. ஐ.என்.எஸ் திரிகாந்த் என்பது இந்தியக் கப்பற் படையின் கலைநயமிக்க பல்துறை சார்ந்த ஆயுதங்கள் மற்றும் முப்பரிணாமங்களில் (வான்வெளி, நிலப்பரப்பு மற்றும் நிலத்தடி) இருக்கும் அச்சுறுத்தல்களை குறித்துக் காட்டும் உணர்விகள் (சென்சார்) ஆகியவற்றைக் கொண்ட இந்தியப் போர்க் கப்பலாகும்.
உத்திரப் பிரதேசத்தின் நொய்டாவில் உலகிலேயே மிகப்பெரிய கைபேசி உற்பத்தி நிலையத்தைத் தென்கொரியாவின் தொழில்நுட்ப பேராற்றல் வாய்ந்த நிறுவனமான சாம்சங் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட் போன்களுக்கான சந்தையாக இந்தியா மாறியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்களுக்கான சந்தையில் அமெரிக்காவை இந்தியா முந்தியது.
T-20ல் மூன்று முறை 100 ரன்களைக் குவித்த முதல் இந்திய வீரர் மற்றும் ஒட்டு மொத்தமாக இரண்டாவது வீரர் என்ற பெருமையை இந்தியாவின் ரோகித் சர்மா பெற்றுள்ளார். இதற்கு முன் காலின் முன்ரோ இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். தற்செயலாக டெஸ்ட், ஒருநாள் போட்டி, T-20 ஆகிய ஒவ்வொரு தொடரிலும் மூன்று முறை 100 ரன்களைக் குவித்த முதலாவது வீரர் என்ற பெருமையையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
இமாச்சல பிரதேச மாநில அரசானது குவளைகள், தட்டுகள் கண்ணாடிகள், கரண்டிகள் அல்லது எந்தவொரு பொருட்களிலும் தெர்மோகோல் கருவிகளை (Thermocol Cutlery) உபயோகிக்க மற்றும் விற்க தடை விதித்துள்ளது. இந்த ஆணையைப் பின்பற்றாதவர்கள் அவர்கள் பயன்படுத்தும் தெர்மோகோலின் அளவைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படுவர் என்று இமாச்சல அரசு கூறியுள்ளது.
உற்பத்தியாளர்கள் தங்கள் இருப்பில் உள்ள தெர்மோகோல் பொருட்களை மூன்று மாதத்திற்குள் அகற்ற வேண்டும் என்று அம்மாநில அரசு கெடு விதித்துள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கியானது ராஜஸ்தானின் ஆல்வாரில் உள்ள ஆல்வார் கூட்டுறவு வங்கி லிமிடெட்டுக்கான உரிமத்தை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் வங்கிப் பணிகள் ஜூலை 05, 2018 முதல் முடக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மேகாலயாவின் ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு மன்றத்தின் 67-வது முழுமையான சந்திப்பு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது நகர்ப்புற பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் தொழில்நுட்பத் துணைத் திட்டமாக உலகளாவிய வீட்டுக் கட்டமைப்பு தொழில்நுட்பத்திற்கான சவால் என்ற திட்டத்தைத் தொடங்க இருக்கிறது.
காமன்வெல்த் விளையாட்டுகளின் கட்டமைப்பின் மதிப்புமிக்க விளையாட்டு வீரர்களின் ஆலோசனை ஆணையத்திற்கு ஆசியாவின் பிரதிநிதியாக ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லீகல் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை காமன்வெல்த் விளையாட்டுகளின் கூட்டமைப்பு நியமித்துள்ளது.