TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 21 , 2023 555 days 270 0
  • திருநெல்வேலி மாவட்டத்தில் 33.02 கோடி செலவில் கட்டமைக்கப்பட உள்ள பொருநை அருங்காட்சியகத்திற்குத் தமிழக முதல்வர் அவர்கள் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
  • தமிழக அரசானது, ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி V. பழனிக்குமாரை மீண்டும் இரண்டும் ஆண்டுகளுக்கு மாநிலத் தேர்தல் ஆணையராக  மீண்டும் நியமித்து உள்ளது.
  • தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள 570 மீட்டர் நீளமும் 4.2 மீட்டர் அகலமும் கொண்ட இந்தியாவின் மிக நீளமான ஆகாய நடைபாதை மேம்பாலமானது பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப் பட்டுள்ளது.
    • இது சென்னையில் மாம்பலம் இரயில் நிலையத்தையும் தியாகராய நகர் பேருந்து நிலையத்தையும் இணைக்கிறது.
  • ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மூத்த வழக்கறிஞர் கல்பாத்தி வெங்கடராமன் விஸ்வநாதன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
  • அர்ஜூன் ராம் மேக்வால், சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும், கிரண் ரிஜிஜு புவி அறிவியல் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • ஹிந்துஜா குழுமத்தின் தலைவரான ஸ்ரீசந்த் பர்மானந்த் எனப்படும் SP ஹிந்துஜா (87) சமீபத்தில் லண்டனில் காலமானார்.
  • HDFC சொத்து மேலாண்மை நிறுவனமானது, பாதுகாப்புத் துறையில் கவனம் செலுத்தும் வகையிலான நாட்டின் முதல் பரஸ்பர நிதியைத் தொடங்க உள்ளது.
    • இது இத்துறையின் வளர்ச்சித் திறனில் பங்கேற்க முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கும்.
  • ஒரே ஆண்டில் டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20  மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டி ஆகியவற்றில் சதம் அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற ஒரு பெருமையை இந்திய நாட்டினைச் சேர்ந்த ஷுப்மன் கில் பெற்றுள்ளார்.
  • எண்ணிம அணுகல் தன்மையின் பெரு முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு பெரும் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தின் மூன்றாவது வியாழக் கிழமை அன்று (மே 18) உலகளாவிய அணுகல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்