தேயிலையின் நிலையான உற்பத்தி, நுகர்வு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தச் செய்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் மே 21 தேதியானது சர்வதேசத் தேயிலை தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் அனுசரிக்கப் படுகிறது.
இந்திய அரசானது, மோச்சா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் நாட்டிற்கு உதவச் செய்வதற்காக ‘கருணா நடவடிக்கையினை’ தொடங்கியுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்தியின் மதிப்பானது, முதன்முறையாக 1 லட்சம் கோடி ரூபாயினை (1,06,800 கோடி) தாண்டியுள்ளது.
இந்திய ராணுவமானது பல்வேறு கூட்டுப் பயிற்சிகளை மதிப்பிடச் செய்வதற்கு என்றும், பல்வேறு நிறுவனங்களின் வெள்ள மீட்பு அமைப்புகள் மூலம் ஒரு தயார்நிலையை நன்கு ஒருங்கிணைக்கச் செய்வதற்காகவும், கூட்டு வெள்ள நிவாரண 'ஜல் ரஹத்' என்ற கூட்டுப் பயிற்சியினை நடத்தியது.
2022-23 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் பாரத் ஸ்டேட் வங்கியின் நிகர இலாபமானது 83 சதவீதம் உயர்ந்து அதிகபட்சமாக 16,694.51 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
இந்தியப் போட்டித் திறன் ஆணையத்தின் தலைவராக ரவ்னீத் கௌர் என்பவரை அரசாங்கம் நியமித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியின் ஒரு அதிகாரப்பூர்வச் சின்னமான சிந்து சரஸ்வதி சப்யாதா எனப்படும் வெண்கலத்தாலான நடனப் பெண் சிலையின் பாணியினால் ஈர்க்கப்பட்டு, சன்னப் பட்டினப் பாணியில் அமைக்கப்பட்ட 5 அடி உயர பொம்மையின், பகட்டான மற்றும் சமகாலத்திய ஒரு முழு அளவிலான வடிவத்தினைப் பிரதமர் டெல்லியில் திறந்து வைத்தார்.
மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் கூற்றுப்படி, 2023-24 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் இந்தியா 16 சதவீதப் பங்கினை அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.