TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 24 , 2023 424 days 266 0
  • R. சக்திவேல், P. தனபால், C. குமரப்பன் மற்றும் K. ராஜசேகர் ஆகிய நான்கு நீதிபதிகளை சென்னை உயர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் அவர்கள் நியமித்துள்ளார்.
    • இதன் மூலம் 75 என்ற உயர் நீதிமன்றத்தின் ஒரு அனுமதிக்கப்பட்ட  நீதிபதிகளின் எண்ணிக்கையில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையானது 65 ஆக உயரும்.
  • மாநிலத்தில் உள்ள 48 முக்கியக் கோயில்களின் பிரசாதங்களை முன்பதிவு மூலம் பக்தர்களின் வீடுகளுக்கே அனுப்பும் திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
  • பிரித்தானிய பாதுகாப்புச் சபையானது, திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டமைப்புத் திட்டத்திற்கு முதல் தர தகுதிப் பிரிவில் சர்வதேசப் பாதுகாப்பு விருதினை வழங்கியுள்ளது.
  • மத்திய அரசானது இளையோர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் அவர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காகவும் "Meri LiFE" (எனது வாழ்க்கை) எனப்படும் கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அமேசான் வலைதளச் சேவை வழங்கீட்டு நிறுவனமானது (AWS), 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் மேகக் கணிமம் சார்ந்த உள்கட்டமைப்பில் 12.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
  • இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா தேயிலையானது, பாதுகாக்கப்பட்ட புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தி அவர்களின் மார்பளவுச் சிலையை இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்.
  • மங்களூரு மாநகராட்சிக் கழகமானது, பொதுமக்களிடமிருந்துப் பயன்படுத்தப்படாத அல்லது பயன்படுத்தப்பட்ட நெகிழிப் பொருட்கள், உடைகள், காலணி, புத்தகங்கள், செய்தித் தாள்கள் மற்றும் பொம்மைகளை சேகரிப்பதற்காக 'மேரி லைஃப், மேரா ஸ்வச் ஷேஹர்’ என்ற பிரச்சாரத்தினைத் தொடங்கியுள்ளது.
  • நூலாசிரியர் ரஸ்கின் பாண்ட் “The Golden Years: The Many Joys of Living a Good Long Life” என்ற தலைப்பிலான ஒரு புத்தகத்தினை எழுதியுள்ளார்.
  • வரலாற்றில் முதன்முறையாக, அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டிற்கான FIFA உலகக் கோப்பை போட்டியின் சின்னத்திற்காக, உண்மையான FIFA உலகக் கோப்பை மற்றும் போட்டி நடத்தப்படும் ஆண்டு ஆகியவற்றை உள்ளடக்கிய வகையிலான ஒரு படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்