TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 26 , 2023 550 days 327 0
  • தொழிலதிபர் கருமுத்து T.கண்ணன் சமீபத்தில் மதுரையில் காலமானார்.
    • இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தக்கர் ஆகவும் தியாகராஜர் மில்ஸின் தலைவராகவும் செயல்பட்டார்.
  • G20 அமைப்பின் மூன்றாவது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை செயற்குழு (ECSWG) கூட்டமானது மகாராஷ்டிராவின் மும்பை நகரில் நடைபெற்றது.
  • தேசிய விசாரணை அமைப்பானது, 'த்வஸ்த் நடவடிக்கை’ என்ற பெயரிலான ஒரு இயக்கத்தினை நாடு முழுவதும் மேற்கொண்டது.
  • 2022-23 ஆம் ஆண்டில், அரசுக்குச் சொந்தமான கடன் வழங்கீட்டு நிறுவனங்களில், GeM தளத்தில் மொத்தமாக 592.82 கோடி ருபாய் கொள்முதல் செய்ததையடுத்து கனரா வங்கி மிகப்பெரிய கொள்முதல் செய்த நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
  • குஜராத்தில் உள்ள ஓகா எனுமிடத்தில் அமைக்கப்பட உள்ள தேசியக் கடலோரக் காவல் துறையின் (NACP) நிரந்தர வளாகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அடிக்கல்லினை நாட்டினார்.
  • 2023 ஆம் ஆண்டில் முடிவடைந்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் ஒட்டு மொத்த இலாபமானது 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது.
  • உலகளாவிய தனியார் பங்கீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன், சர்வதேச மணிகற்கள் ஆய்வு நிறுவனத்தில், சீனாவில் அமைந்துள்ள முதலீட்டு நிறுவனமான ஃபோசன் மற்றும் ரோலண்ட் லோரி கொண்டிருந்த 100% பங்குகளை வாங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்