TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 27 , 2023 420 days 303 0
  • ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனம் இஸ்ரேல் அரசாங்கத்துடன் கை கோர்த்து ‘இந்தியா - இஸ்ரேல் நீர் தொழில்நுட்ப மையத்தை’ நிறுவியுள்ளது.
  • தமிழக அரசு 2023 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி முதல் குட்கா மீதான தடையை ஓராண்டுக் காலத்திற்கு நீட்டித்துள்ளது.
    • தமிழகம் இத்தடையை 2016 ஆம் ஆண்டு அமல்படுத்தியது.
  • சமீபத்தில் உலகத் தடகள அமைப்பினால் வெளியிடப்பட்ட ஆண்கள் ஈட்டி எறிதல் தர வரிசையில் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா தனது வாழ்நாளில்  முதல் முறையாக உலகின் நம்பர் 1 வீரர்  ஆனார்.
  • சீனா ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் முன்னணி கார் ஏற்றுமதியாளராக மாறி உள்ளது.
  • பிக்ரம் சம்வத் நாட்காட்டியின் படி  2080 ஆம் ஆண்டை 'நேபாளத்திற்கு வருகை தரும் தசாப்தம்' என்றும், 2025 ஆம் ஆண்டைச் சுற்றுலாவுக்கான ஒரு சிறப்பு ஆண்டு என்றும் நேபாளம் அறிவித்துள்ளது.
  • அயர்லாந்து நாடு மதுபானங்களின் முகப்புச் சீட்டில் புற்றுநோய் எச்சரிக்கைகள் மற்றும் கலோரி அளவு குறித்து அச்சிடப் பட வேண்டும் எனப் புதிய விதிகளை வகுத்து உள்ளது.
    • இதுவே உலகில் முதல் முறை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்