TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 2 , 2023 414 days 257 0
  • புகை பிடிப்பவர்களுக்குத் தீங்கைக் குறைக்கும் கருவியாக மின்- சிகரெட்டுகள் குறித்த  (vaping) சாத்தியமான நன்மைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மே 30 ஆம் தேதியன்று உலக வேப் தினம் (மின்னணு சிகரெட்டு) கொண்டாடப் படுகிறது.
  • அசாமின் குவஹாத்தி மற்றும் மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி ஆகியப் பகுதிகளை இணைக்கும் அசாம் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் விரைவு இரயிலைப் பிரதமர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • G20 ஊழல் எதிர்ப்பு பணிக் குழுவின் இரண்டாவது கூட்டமானது, சமீபத்தில் ரிஷிகேஷ் நகரில் நடைபெற்றது.
  • தெலுங்கானா மாநிலமானது, பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா எனப்படும் திட்டத்தின் மூலம், அனைத்து மக்களுக்கும் வங்கிச் சேவைகளை வழங்கிய ஒரு மாநிலமாக மாறி உள்ளது.
  • UNFCCC அமைப்பின் பங்குதாரர்கள் மாநாட்டின் 28வது அமர்வின் தலைவருக்கான ஒரு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக முகேஷ் அம்பானி நியமிக்கப் பட்டுள்ளார்.
  • சண்டிகர் ஒன்றியப் பிரதேசத்தின் கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை, கால்நடைகளின் மருத்துவச் சிகிச்சைப் பதிவேடுகளை கணினிமயமாக்கியதற்காக மின்-ஆளுமைச் சேவைக்கான 2023 ஆம் ஆண்டு ஸ்கோச் சில்வர் விருதினைப் பெற்று உள்ளது.
  • ஊடுகதிர் முனை வாக்கமானி செயற்கைக்கோளை (XPoSat) உருவாக்கச் செய்வதற்காக பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (RRI) இஸ்ரோ இணைந்து செயல்படுகிறது.
    • இது இந்தியாவின் முதலாவது மற்றும் உலகின் இரண்டாவது முனை வாக்கமானி ஆய்வுப் பணியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்