முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பெயரில் சென்னையில் ஒரு சர்வதேச மாநாட்டு மையம் அமைக்கப் படவுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் தனது இணையதளத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தைப் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
இது அனைத்து மக்களும் சுகாதாரச் சேவையை அணுகுவதற்காக வேண்டி தமிழக அரசின் சுகாதாரத் திட்டமாகும்.
தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை ஊட்டியில் தொடங்கி வைத்தார்.
ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுகம் (UPI) எனப்படும் யுபிஐ மூலம் செய்யப் பட்ட பரிமாற்றமானது மே மாதத்தில் 9.41 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் மொத்த மதிப்பானது அதிகபட்சமாக ரூ. 14.3 டிரில்லியன்கள் எனற அளவை எட்டியது.