அபிருப் பட்டாச்சாரியா எழுதிய “சவ்ரவ்வைப் போன்ற வெற்றி: கங்குலியைப் போன்ற சிந்தனை மற்றும் வெற்றி” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. சவ்ரவ் கங்குலி திறமைமிகு இளைஞர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் பலனாக இந்தியா சிறந்த கிரிக்கெட் வீரர்களைப் பெற்றுள்ளது என்று இந்நூல் கூறுகிறது.
இதற்கு முன்னர் அபிருப் பட்டாச்சாரியா “விராட்டைப் போன்ற வெற்றி: கோலியைப் போன்று சிந்தனை மற்றும் வெற்றி” என்ற நூலை எழுதியுள்ளார்.
மத்திய அரசின் சிந்தனைச் சாவடியான நிதி ஆயோக் ‘தேசிய சுகாதார அடுக்கு‘ என்ற பகிர்ந்து கொள்ளப்பட்ட டிஜிட்டல் சுகாதார கட்டமைப்பிற்கான செயல்திட்டத்தை வெளியிட்டுள்ளது. நாட்டில் மத்திய அரசினால் செயல்படுத்தப்படும் தலைமைத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் மற்றும் இதர பொது சுகாதார திட்டங்கள் வரிசையில் இந்த செயல்திட்டம் அமைந்துள்ளது.
புது தில்லியில் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 16 முதல் 18ஆம் தேதி வரை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் முதல்முறையாக ‘இந்திய சுற்றுலா சந்தையை (India Tourism Mart) நடத்த இருக்கிறது. இந்திய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சங்கங்களின் கூட்டமைப்புகள் (FAITH - Federation of Association in Indian Tourism and Hospitality) என்ற அமைப்புடன் இணைந்து இந்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் இந்நிகழ்ச்சியை நடத்துகிறது.
மேற்கு இரயில்வேயின் ராஜ்காட் பிரிவில் முதலாவது இரட்டை அடுக்குள்ள சரக்குக் கொள்கலன் சேவையை இந்திய இரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரட்டை அடுக்குள்ள சரக்குக் கொள்கலன் பயன்பாட்டின் மூலம், அப்பிரிவின் செலவு கணிசமாகக் குறைக்கப்படும்.