உயர்நிலைத் தணிக்கை நிறுவனங்கள்-20 (SAI20) என்பதின் ஈடுபாட்டுக் குழுவின் உச்சி மாநாடானது கோவாவில் நடைபெற உள்ளது.
இந்தியாவின் சில்லறைப் பணவீக்கமானது 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.25 சதவீதமாகக் குறைந்தது.
பழங்குடியின எழுத்தாளர்களின் முதல் தேசிய மாநாடானது ஜம்மு காஷ்மீரில் நடத்தப் பட்டது.
"When Climate Change Turns Violent" என்ற தலைப்பிலான ஓர் இந்திய ஆவணப்படமானது உலக சுகாதார அமைப்பின் 4வது வருடாந்திரமான அனைவருக்குமானச் சுகாதாரம் என்ற ஒரு திரைப்பட விழாவில் (HAFF) 'அனைவருக்குமான சுகாதாரம்' பிரிவில் சிறப்புப் பரிசை வென்றுள்ளது.
இந்திய ஹாக்கி அணி ஜப்பானில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொரியக் குடியரசை வீழ்த்தி தனது முதல் மகளிர் ஜூனியர் ஹாக்கி ஆசியக் கோப்பை 2023 பட்டத்தை வென்றது.