டெல்லியில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கம் என்ற பெயரானது, 'பிரதமர்' அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கம் என்று மாற்றப் பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்துள்ள நாடாக சிங்கப்பூர் உருவெடுத்துள்ள நிலையில், அதைத் தொடர்ந்து மொரீஷியஸ், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது சர்வதேசச் சமூகப் பாதுகாப்புச் சங்கத்தின் (ISSA) துணை உறுப்பினர் அந்தஸ்தினைப் பெற்றுச் சர்வதேச அங்கீகாரத்தினைப் பெற உள்ளது.
இந்தியக் கடற்படையின் போர்க் கப்பலான ஐஎன்எஸ் சாத்புரா, இந்தோனேசியாவின் மகஸ்ஸர் என்னுமிடத்தில் நடைபெற்ற கொமோடோ எனப்படும் 4வது பலதரப்புக் கடற் படைப் பயிற்சியில் பங்கேற்றது.
அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும் வீட்டில் இருப்பதற்காகவும், மகிழ்ச்சியானச் சுற்றுலா அனுபவத்திற்காக வேண்டி வெளிப்புறப் பகுதிகளில் கூடி மகிழும் சிறந்தச் சந்தர்ப்பத்தினை வழங்குவதற்காகவும் ஜூன் 18 ஆம் தேதியன்று சர்வதேசக் குடும்பச் சுற்றுலாத் தினம் அனுசரிக்கப்படுகிறது.
தந்தையின் அன்பு மற்றும் அவரது தியாகத்திற்கு மரியாதை அளிக்கும் விதமாக ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையன்றுத் தந்தையர் தினம் கொண்டாடப் படுகிறது.