TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 22 , 2023 523 days 300 0
  • G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழான மூன்றாவது G20 நிலையான நிதிசார் செயற்குழு (SFWG) கூட்டமானது தமிழ்நாட்டில் உள்ள மகாபலிபுரம் எனுமிடத்தில் நடைபெற்றது.
  • தொலைதூரப் பகுதிகளில் தனியாகப் பயணம் செய்யும் பெண்கள் தாங்கள் பாதுகாப்பு அற்றதாக உணர்ந்தால் காவல்துறையின் உதவியை நாடும் வகையிலான ஒரு புதியச் சேவையைத் தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இனிமேல் தனியாக பயணம் செய்யும் பெண்கள் மற்றும் காவல்துறை உதவியை நாடுபவர்கள் 1091, 112, 044-23452365 மற்றும் 044-28447701 ஆகிய எண்களுக்கு  அழைக்கலாம்.
  • வடகிழக்குப் பகுதியின் இரயில்வே நிர்வாக அதிகாரத்தின் கீழ் செயல்படும் அசாமின் கௌஹாத்தி இரயில் நிலையத்திற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தினால் ‘சரியான உணவு முறையினைப் பின்பற்றும் நிலையம்’ என சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது.
  • மூத்த இந்தியக் காவல்பணி அதிகாரி ரவி சின்ஹா இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு (RAW) எனப்படும் இந்தியாவின் வெளிப்புற புலனாய்வு அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் சுவாமிநாதன் ஜானகிராமன் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) துணை ஆளுநர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • கலாச்சார அமைச்சகம், ஒடிசா மாநில அரசு மற்றும் KIIT பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் முதலாவது ஜன்ஜாதியா கேல் மஹோத்சவ் எனப்படும் ஒரு மாபெரும் விளையாட்டுப் போட்டி நிகழ்வினை நடத்தின.
  • அகிம்சை மற்றும் பிற காந்திய முறைகள் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கான சிறந்தப் பங்களிப்பினை வழங்கியதற்காக கோரக்பூரில் உள்ள கீதா அச்சகத்திற்கு 2021 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு வழங்கப்பட உள்ளது.
  • தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தேசிய யோகா ஒலிம்பியாட் 2023' போபால் நகரில் நடைபெற்றது.
  • உலக வங்கியானது (WB) 358 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கி, தெற்காசியாவில் வங்காளதேசத்தில்  தனது முதல் பிரத்தியேக சாலைப் பாதுகாப்பு திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்ற தமிழ்நாட்டினைச் சேர்ந்த C.A. பவானி தேவி சீனாவின் வூசி எனுமிடத்தில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தினை (வெண்கலம்) வென்று வரலாறு படைத்துள்ளார்.
  • ஒவ்வோர் ஆண்டின் கோடைகால சங்கிராந்தி நாளான ஜூன் 21 ஆம் தேதியன்று, மனித நேயத்தை ஒரு தத்துவார்த்த வாழ்க்கை நிலைப்பாடாகப் பரப்புரை செய்வதற்காக என்று உலக மனிதநேய தினம் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்