பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு நகரங்களில் அமெரிக்கா தனது புதிய தூதரகங்களைத் திறக்கவுள்ளது.
அமெரிக்காவிடமிருந்து 31 பிரிடேட்டர் ரக ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கான 4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தினை சமீபத்தில் இந்தியா மேற்கொண்டு உள்ளது.
9வது சர்வதேச யோகா தினத்தை நினைவு கூரும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்ற தனித்துவமான யோகா அமர்வானது ஐநா சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது.
ஹுருன் இந்தியா அமைப்பின் 2022 ஆம் ஆண்டு பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா அமைப்பின் 500 முன்னணி நிறுவனங்களின் பட்டியலின்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க தனியார் நிறுவனமாக உள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து டாடா ஆலோசனைச் சேவை நிறுவனம் மற்றும் HDFC வங்கி ஆகியவை உள்ளன.
பீகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் ‘உலகின் மிகப்பெரிய இராமாயணக் கோவிலின்’ கட்டுமானப் பணிகள் தொடங்கப் பட்டன.