TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 28 , 2023 388 days 238 0
  • இல்லத்தரசிகள் தங்கள் கணவரின் வருமானத்தில் வாங்கப் படும் சொத்தில் சமமான பங்கினைப் பெறுவதற்கு உரிமை உண்டு என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறி உள்ளது.
  • V.P. சிங் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் முன்னாள் பிரதமர் V.P. சிங் அவர்களின் சிலையினை நிறுவுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத்தின் (WIA) இயக்குனர் செல்வலட்சுமி கணேசராஜா சமீபத்தில் காலமானார்.
  • ஃபோர்ப்ஸ் இதழின் 50 செல்வாக்குமிக்க தலைமைச் சந்தைப்படுத்தல் அதிகாரிகளின் பட்டியலில் டாடா குழுமத்தின் நிறுவனப் பொறுப்பு அதிகாரி ஹரீஷ் பட் (10வது) முதல் பத்து செல்வாக்கு மிக்க தலைமைச் சந்தைப்படுத்தல் அதிகாரிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
  • இந்தியக் கடற்படையானது லடாக் பகுதியில், அதன் பழமையான சேவையைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், இளைஞர்கள் மற்றும் பொதுச் சமூகத்துடன் நன்கு ஈடுபடுவதற்கும் வாய்ப்பளிக்கிற வகையில் "ஜுல்லி லடாக்" (ஹலோ லடாக்) என்ற பெயரிலான ஒரு விழிப்புணர்வுத் திட்டத்தினை மேற்கொண்டு வருகிறது.
  • ரியூட்டர்ஸ் இதழியல் கல்வி நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான எண்ணிமச் செய்தி அறிக்கையின் படி தூர்தர்ஷன் இந்தியா மற்றும் அகில இந்திய வானொலி ஆகியவை நாட்டின் மிகவும் நம்பகமான மின்னணு ஊடக அமைப்புகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளன.
  • பாரத் ஜாக்ருதி அமைப்பினால் நிறுவப்பட்ட பேராசிரியர் கொத்தப்பள்ளி ஜெயசங்கர் விருதுக்கு ஆச்சார்யா  N.கோபி தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் மற்றும் பெரு கல்வெட்டுகளைக் கொண்ட 1000 ஆண்டுகள் பழமையான இரண்டு சதுர வடிவ தூண்கள், ஹைதராபாத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள எனிகேபள்ளி என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • சந்திரயான்-2 ஆய்வுக் கலத்தின் பெயரைப் போலவே சந்திரயான்-3 ஆய்வுத் திட்டத்தின் தரையிறங்குக் கலத்திற்கு ‘விக்ரம்’ என்றும் அதன் உலவு ஆய்வுக் கலத்திற்கு ‘பிரக்யான்’ என்றும் பெயரிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்