TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 29 , 2023 387 days 258 0
  • இந்தியாவின் மிகப்பெரிய விமானச் சேவை வழங்கீட்டு நிறுவனமான இண்டிகோ, 500 ஏர்பஸ் A320 ரக விமானங்களை கொள்முதல் செய்ய  விமானப் போக்குவரத்துச் சேவை வரலாற்றிலேயே மிகப்பெரியக் கொள்முதல் ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
  • இந்தியத் தேசிய இணைய சேவைப் பரிமாற்ற அமைப்பானது (NIXI) ஜூன் 19 ஆம் தேதி அன்று அதன் 20வது நிறுவனத் தினத்தினைக் கொண்டாடியது.
  • அசாமின் முதல் நீரடி இரயில்தடச் சுரங்கப் பாதையானது, நுமாலிகர் மற்றும் கோஹ்பூர் ஆகிய பகுதிகளுக்கு இடையே கட்டமைக்கப்பட உள்ளது.
  • தேசிய மருத்துவர்கள் தினத்தை நன்கு நினைவு கூரும் வகையில் இந்திய மருத்துவச் சங்கத்தினால் நிறுவப்பட்ட விருதிற்கு ஆலப்புழாவைச் சேர்ந்த டாக்டர் K. வேணு கோபால் என்பவர் சமூகச் சேவைப் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • சர்வதேசக் கால்பந்துக் கூட்டமைப்புகளின் சங்கத்தின் (FIFA) சபையானது U-17 உலகக் கோப்பைப் போட்டியினை நடத்துவதற்கு பெருவுக்குப் பதிலாக இந்தோனேசியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.
    • FIFA கூட்டமைப்பானது, கொலம்பியா 2024 ஆம் ஆண்டு U-20 மகளிர் உலகக் கோப்பைப் போட்டியினை நடத்த உள்ளதாகவும், டொமினிகா U-17 மகளிர் உலகக் கோப்பைப் போட்டியினை நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்