TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 2 , 2023 384 days 245 0
  • 10,000க்கும் மேற்பட்ட ஆரம்ப நிலை சுகாதார நிலையங்கள் மூலம் இதய நோய்க்கான மருந்துகள் வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
  • மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த அளவாக (ஜூன் 27) இந்தியாவில் 33 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
  • மாநிலங்களுக்கான ஒரு மூலதன முதலீட்டுச் சிறப்பு உதவித் திட்டத்தின் (2023-24) கீழ் சுமார் 56,415 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இது 16 மாநிலங்களில் உள்ள பல்வேறு துறைகளின் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பிரதமர் ஐந்து புதிய வந்தே பாரத் விரைவு ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
    • அவை ராணி கமலாபதி-ஜபல்பூர் வந்தே பாரத் விரைவு வண்டி, கஜுராஹோ-போபால்-இந்தூர் வந்தே பாரத் விரைவு வண்டி, மட்கான் (கோவா)-மும்பை வந்தே பாரத் விரைவு வண்டி, தார்வாட்-பெங்களூரு வந்தே பாரத் விரைவு வண்டி மற்றும் ஹதியா-பாட்னா வந்தே பாரத் விரைவு வண்டி ஆகியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்