தமிழகத்தின் 49வது தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப் பட்டு உள்ளார்.
தமிழகத்தின் புதிய காவல்துறை இயக்குநராக சங்கர் ஜிவால் நியமிக்கப் பட்டுள்ளார்.
சென்னை நகரின் புதிய காவல்துறை ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப் பட்டுள்ளார்.
அமிர்தசரஸில் உள்ள குருநானக் மைதானத்தில் நடைபெற்ற தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மாநிலம் 2-1 என்ற கோல் கணக்கில் ஹரியானாவை வீழ்த்தி வென்றது.
தமிழ்நாடு கடைசியாக இப்பட்டத்தை 2018 ஆம் ஆண்டில் வென்றது.
64வது உலகளாவியச் சுற்றுச்சூழல் வசதி (GEF) மன்றத்தின் ஒரு கூட்டம் பிரேசிலில் நடைபெற்றது.
காலநிலை, பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் மாசுபாடு நெருக்கடிகளைச் சமாளிக்கச் செய்வதற்கான பல முயற்சிகளைத் துரிதப்படுத்தச் சுமார் $1.4 பில்லியன் வழங்க ஒப்புதலை அளித்து உள்ளது.