TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 6 , 2023 509 days 292 0
  • பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் இராணி கமிலா ஆகியோர் இந்திய வளங்காப்பாளர்களான ‘The Elephant Whisperers’ திரைப்படத் தயாரிப்பாளர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் 70 ஆதிவாசிக் கலைஞர்கள் நடத்தும் தி ரியல் எலெஃபென்ட் கலெக்டிவ் (TREC) நிறுவனம் ஆகியவற்றிற்கு குடும்ப யானை வளங்காப்பு சுற்றுச்சூழல் விருதினை வழங்கினர்.
  • புகழ்பெற்ற ஒரு குழந்தைகள் எழுத்தாளரும் திறனாய்வுக் கவிஞருமான மைக்கேல் ரோசன், 2023 ஆம் ஆண்டிற்கான PEN பின்டர் பரிசினைப் பெற்றுள்ளார்.
  • தொலைத் தொடர்புத் துறை ‘5G & அதற்கும் அப்பாற்பட்டத் தொழில்நுட்பம் மீதான ஹேக்கத்தான் 2023’ என்ற  நிகழ்ச்சியினை நடத்த உள்ளது.
    • இது செயல்முறைக்கு உள்ளாக்கக் கூடிய வகையில் 5G மற்றும் அதற்கு அப்பாற் பட்டத் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளாக மாற்றக்கூடிய வகையில் இந்தியாவை மையமாகக் கொண்ட பல்வேறு அதிநவீன கருத்தாக்கங்களைப் பட்டியலிடுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 62 நாட்கள் அளவிலான யாத்திரையான அமர்நாத் யாத்திரை என்பது 2023 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று தொடங்கிய நிலையில் இந்த யாத்திரையானது ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று முடிவடைகிறது.
    • அமர்நாத் கோவில் என்பது ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவில் ஆகும்.
  • சர்வதேச நகைச்சுவை தினம் ஜூலை மாதம் 1 ஆம் தேதி அன்று ஒரு இலகுவான மனம் கொள்ளும் நிகழ்வாகக் கொண்டாடப் படுகிறது.
    • தனிநபர்களைச் சிரிக்க வைக்கவும் நகைச்சுவைகளைப் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களுடன் வலுவான பிணைப்பை வளர்க்கவும் இது  ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்