TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 16 , 2023 370 days 251 0
  • கோயம்புத்தூரைச் சேர்ந்த S.ராஜசேகரன் அவர்களுக்கு, முதுகுத் தண்டுவட நோய்களுக்கான ஆராய்ச்சியில் ஆற்றிய சிறந்தப் பங்களிப்பிற்காக சர் J.C. போஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • கொலம்பியாவின் கார்டஜீனா நகரில் நடைபெற்ற உறுப்பினர் நாடுகளின் 11வது கூட்டத்தில் உலகத் தேர்தல் அமைப்புகள் சங்கத்தின் (A-WEB) நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையர் பங்கேற்றார்.
    • A-WEB ஆனது 119 நாட்டுத் தேர்தல் அமைப்புகளை உறுப்பினர்களாகவும், 20 பிராந்தியச் சங்கங்கள்/நிறுவனங்களை இணை உறுப்பினர்களாகவும் கொண்டு உள்ளது.
  • உலக வர்த்தக அமைப்பிற்கான (WTO) இந்திய நாட்டின் தூதுவராகவும் அதன் நிரந்தரப் பிரதிநிதியாகவும் உள்ள பிரஜேந்திர நவ்னீத்தின் பதவிக் காலத்தினை அரசாங்கம் நீட்டித்துள்ளது.
  • பஜாஜ் அலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது உலக எண்ணிம வழிக் காப்பீட்டு விருது விழாவில் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான 2023 ஆம் ஆண்டு காப்பீட்டு நிறுவனப் புத்தாக்க விருதினை வென்றுள்ளது.
  • நலன் பயக்கும் செயற்கை நுண்ணறிவு உலக உச்சி மாநாடானது சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தினால் நடத்தப்பட்டது.
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 ஆம் தேதியன்று தேசியப் பிளாஸ்டிக் மற்றும் முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை தினமானது இந்தியாவில் கொண்டாடப் படுகிறது.
  • முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதி என்பது, தமிழகப் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்