TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 20 , 2023 366 days 250 0
  • அதானி குழுமமானது, வங்காளதேச மின் கட்டமைப்பிற்கு மின்சாரம் வழங்கச் செய்வதற்காக ஜார்க்கண்டில் கோடா எனுமிடத்தில் இந்தியாவின் முதல் பன்னாட்டு மின் வழங்கீட்டு நிலையத்தினைச் செயல்படுத்தியுள்ளது.
  • இத்தாலியில் நடைபெற்ற ISSF துப்பாக்கி உலகக் கோப்பை லோனாட்டோ 2023 போட்டியில் ஆடவருக்கான ட்ராப் போட்டிப் பிரிவில் இந்தியத் துப்பாக்கி சுடுதல் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • இந்திய இராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ஆகியவை இணைந்து ஜம்மு மற்றும் காஷ்மீரில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளுக்கு எதிராக திரிநேத்ரா-II எனப் படும் ஒரு நடவடிக்கையினை மேற்கொண்டன.
  • மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (MIDC) மற்றும் மகாராஷ்டிர மாநில அரசு ஆகியவை இணைந்து அமராவதியில் PM MITRA பூங்காவினை நிறுவியுள்ளன.
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது, 2023 ஆம் ஆண்டு G20 உலக உணவு ஒழுங்குமுறை உச்சி மாநாட்டினை டெல்லியில் ஏற்பாடு செய்து உள்ளது.
  • பாங்காக் நகரில் நடைபெற்ற 12வது மீகாங்-கங்கா ஒத்துழைப்புக் கூட்டத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  தலைமை தாங்கினார்.
  • உலக வங்கியானது, குறைந்த பட்ச கார்பன் உமிழ்வுதிறன் கொண்ட இந்திய எரிசக்தி துறையின் மேம்பாட்டினை துரிதப் படுத்துவதற்காக 1.5 பில்லியன் நிதியுதவி வழங்கச் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்