TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 27 , 2023 359 days 235 0
  • விண்டோஸ் மற்றும் லினக்ஸ் அடிப்படையிலான இயங்குதளம் இரண்டையும் குறி வைக்கும் ‘அகிரா’ எனப்படும் புதிய இணைய பணய தீநிரல் வைரஸ் குறித்து இந்தியக் கணினி அவசரநிலை நடவடிக்கை குழு (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு ‘இணையதளம் மூலம் திரட்டப்படும் (கிக்) தொழிலாளர்கள் (பதிவு மற்றும் நலன்) மசோதா’ எனப்படுகின்ற கிக் தொழிலாளர்களுக்கான ஒரு தனிச் சட்டத்தைக் கொண்ட முதல் மாநிலமாக ராஜஸ்தான் மாற உள்ளது.
  • ஆற்றல் நிதி வழங்கீட்டுக் கழகமானது “ஆசிய எரிசக்தி மாற்ற நிதி வழங்கீட்டு ஆய்வுக் குழுவில்” இணைந்த முதல் இந்திய நிறுவனம் ஆனது.
  • 2022-23 ஆம் நிதியாண்டில் (FY) 2.09 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வாராக் கடன்களை இந்திய வங்கிகள் தள்ளுபடி செய்ததால் கடந்த ஐந்து ஆண்டுகளில் வங்கித் துறையின் மொத்தக் கடன் தள்ளுபடி மதிப்பு 10.57 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
  • செக் குடியரசின் பில்சன் நகரில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உலக வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் சரிதா மற்றும் ராகேஷ் குமார் இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தினை வென்றனர்.
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஆனது, இந்திய விஸ்கித் தயாரிப்பு நிறுவனங்கள் ஆஸ்திரேலியச் சந்தையில் விற்பனையினை மேற்கொள்ள உதவும் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தத்தின் (MRA) சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக ஒரு கூட்டு பணிக்குழுவை உருவாக்கியுள்ளன.
  • பெற்றோர்களின் அன்பு மற்றும் தியாகத்திற்காக அவர்களை கௌரவிக்கும் விதமாக, ஜூலை மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூலை 23) அமெரிக்கத் தேசியப் பெற்றோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்