TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 28 , 2023 486 days 286 0
  • மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகமானது பேரிடர் மேலாண்மைத் திட்டத்திற்கான கையேட்டினை (DMP) வெளியிட்டுள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதி (PF) வைப்புத் தொகைகளுக்கு 8.15% வட்டி வீதம் வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • மீன்வளத் துறைக்கான இந்தியாவின் முதல் மீன்வள அடல் வளங்காப்பு மையம் ஆனது, கேரள மீன்வளம் மற்றும் கடல்சார் ஆய்வுகள் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட உள்ளது.
  • மாநிலங்களவைத் தலைமைப் பொறுப்பினை ஏற்ற நாகாலாந்து மாநிலத்தின் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையைப் பாங்நோன் கோன்யாக் பெற்றார்.
    • நாகாலாந்து மாநிலத்திலிருந்து (ஏப்ரல் 2022) மாநிலங்களவைக்குத் தேர்ந்து எடுக்கப் பட்ட முதல் பெண்மணியும், நாடாளுமன்ற அவைகளுக்குத் தேர்ந்து எடுக்கப் பட்ட நாகாலாந்து மாநிலத்தினைச் சேர்ந்த இரண்டாவது பெண்மணியும் இவர் ஆவார்.
  • ஓபன்AI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் வேர்ல்டுகாயின் எனப்படும் இணையச் சங்கேதப் பணத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்