TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 29 , 2023 357 days 246 0
  • தமிழகத்தின் முதல் ‘மாநில வேளாண் கண்காட்சி (வேளாண் சங்கமம்)’ திருச்சியில் நடத்தப் பட்டது.
  • 4வது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மைச் செயற்குழு (ECSWG) மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
  • ஐக்கியப் பேரரசானது, பூர்வீகத் தாவரங்களைப் பாதுகாப்பதற்கான சில திட்டங்களை நிறுவுவதற்கு தமிழ்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.
  • இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள், சுரங்கத் துறை அமைச்சகத்தினால் வழங்கப் படும் மதிப்புமிக்க 2022 ஆம் ஆண்டிற்கான தேசியப் புவிசார் அறிவியல் விருதுகளை (NGA) இருபத்தி இரண்டுப் புவிசார் அறிவியலாளர்களுக்கு வழங்கினார்.
  • சர்வதேச கடன் அறிக்கையிடல் குழு (ICCR) ஆனது, இஸ்ரேல் வங்கிக்கு உறுப்பினராக அதில் இணைவதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.
  • மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யா சமந்த், இந்தியாவின் 83வது சதுரங்க கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
  • மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆனது, இந்திய எறிப் பந்தாட்டப் போட்டிச் சங்கத்தினை (HAI) தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பாக (NSF) அங்கீகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது.
  • 5வது ஹெலிகாப்டர் மற்றும் சிறிய ரக விமான உச்சி மாநாடு ஆனது (ஹெலி உச்சி மாநாடு 2023) பொது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தினால் மத்தியப் பிரதேசத்தின் கஜூராஹோவில் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது.
    • இந்த நிகழ்வின் கருத்துரு, “உச்ச வரம்பை அடைவது: ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய ரக விமானங்கள் மூலமான பிராந்திய இணைப்பு” என்பதாகும்.
  • உலக இயற்கைப் பாதுகாப்பு தினமானது, ஆண்டுதோறும் ஜூலை 28 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
    • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “காடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள்: மக்களின் நல்வாழ்வையும் கிரகத்தின் நல்வாழ்வையும் நிலை நிறுத்துதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்