இந்திய சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க நாட்டை விட்டு வெளியேறி இந்திய நீதிமன்றங்களின் அதிகார எல்லையிலிருந்து வெளியே இருக்கும் பொருளாதார குற்றவாளிகளை குற்ற வழக்குகளிலிருந்து தப்பிப்பதை தடுப்பதினை நோக்கமாக கொண்ட தலைமறைவு நிதிமோசடி குற்றவாளிகள் மசோதா, 2018க்கு லோக் சபா அனுமதி அளித்துள்ளது.
இந்த மசோதா, ஏப்ரல் 2018-ல் குடியரசுத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரச் சட்டத்திற்குப் பதிலாக இருக்கும்.
6 கிளை வங்கிகளை பாரத் ஸ்டேட் வங்கியுடன் இணைப்பதற்கான ஸ்டேட் வங்கிகள் (ரத்து மற்றும் திருத்த) மசோதா, 2017-னை மாநிலங்களவை ஓப்புதலளித்ததன் மூலம் பாராளுமன்றம் அதற்கு அனுமதி அளித்துள்ளது.
இந்த மசோதாவிற்கு ஏற்கனவே 2017-ம் ஆண்டில் மக்களவையில் பாராளுமன்றத்தின் மழைக்காலத் தொடரில் அனுமதி வழங்கப்பட்டது.
இந்தியாவினால் துவங்கப்பட்ட சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியில் (International Solar Alliance - ISA) மியான்மர் இணைந்துள்ளது. சூரிய ஆற்றலினை உகந்த முறையில் பயன்படுத்துவதினை நோக்கமாகக் கொண்ட ISA-ன் இந்த கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 68வது நாடு மியான்மர் ஆகும்.
இந்தியா மற்றும் ஜப்பானின் கடல்வழி தொடர்பு பேச்சுவார்த்தையின் 4வது சுற்று புதுதில்லியில் நடைபெற்றது.
ஜானா சிறு நிதி வங்கி அதன் வங்கிப்பணிகளின் வணிக ரீதியான தொடக்கத்தினை அறிவித்துள்ளது. 3 வருடங்களுக்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கி அதன் கொள்கையளவிலான ஒப்புதலைக் கொடுத்த பிறகு சிறு நிதி வங்கியாக மாறும் சமீபத்திய நுண்கடன் நிறுவனம் இதுவாகும்.
2019 FIFA மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் பிரான்சில் நடைபெற உள்ளது. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஆடவருக்கான சர்வதேச கால்பந்து சாம்பியன்ஷிப் - 2022 FIFA உலகக் கோப்பை கத்தாரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (Food and drug administration - FDA) கோவாவின் ஒரே மொத்த விற்பனை மீன் சந்தையான மார்கோவில் மற்ற மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களில் பார்மலின் உள்ளதைக் கண்டறிந்த பிறகு கோவா அரசு தனது பிரதான உணவின் இறக்குமதியினை மற்ற அனைத்து மாநிலங்களிலிருந்தும் இறக்குமதி செய்ய 15 நாட்களுக்கு தடை செய்வதாக அறிவித்துள்ளது.
மீன்களை சேமித்து வைப்பதில் பதப்படுத்தும் பொருளாகப் பயன்படுத்தப்படும் பார்மலின் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நச்சுதன்மை வாய்ந்த பொருளாகும்.