TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 3 , 2023 352 days 283 0
  • சிறந்தத் தமிழ் அறிஞர்களைக் கௌரவிப்பதற்காக தமிழக அரசினால் உருவாக்கப் பட்டு, ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘தகைச்சால் தமிழர்’ என்ற விருதானது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
  • இந்திய மகளிர் ஹாக்கி அணியானது, பார்சிலோனாவின் டெராசா நகரில் நடைபெற்ற மூன்று நாடுகளின் டோர்னியோ டெல் சென்டெனாரியோ 2023 போட்டியில் அப்போட்டியினை நடத்திய ஸ்பெயின் நாட்டு அணியைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது.
  • இங்கிலாந்து அணியின் நட்சத்திர டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
  • ஆஸ்திரேலியாவின் கடற்கரை ஒன்றில் கரை ஒதுங்கிய மர்மப் பொருள் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ஏவூர்தியின் எஞ்சிய பாகங்கள் தான் என ஆஸ்திரேலியாவின் விண்வெளி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
  • உலக நுரையீரல் புற்றுநோய் தினம் ஆனது, அந்நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த நோயைப் பற்றி பரவும் தவறானத் தகவல்களை அகற்றவும் அது பற்றிய கூடுதல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 01 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்