தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற பெள்ளி என்பவரை நீலகிரியில் தெப்பக்காடு யானைகள் முகாமில் முதலாவது நிரந்தரப் பெண் காவடியாக (யானைப் பராமரிப்பாளராக) தமிழக அரசு நியமித்துள்ளது.
நீதிபதி G. ரோகிணி தலைமையிலான இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடையே சாதிக் குழுக்களின் துணை அல்லது உட்கூறுப் பிரிவாக்கத்திற்கான ஆணையமானது, 6 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்திக் கழகத்தின் மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய வேதியியல் லிமிடெட் நிறுவனமானது, 2022-23 ஆம் ஆண்டில் நாட்டிலேயே மிகப்பெரிய பொதுத்துறைச் சுத்திகரிப்பு நிலையமாக (ஒரே இடத்தில் அமைந்த) மாறியுள்ளது.
இந்திய அறிவியலாளர்கள் கனிமச் செறிவு சார்ந்தப் பிரிப்பு முறையின் மூலம் “ஆய்வகத்தில்” லித்தியம் கனிமத்தினை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்துள்ளனர்.
இலண்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி எழுத்தாளர் சேத்னா மாரூவின் ‘’Western Lane’ எனப்படும் முதலாவது புதினமானது 2023 ஆம் ஆண்டு புக்கர் விருதிற்கான நீண்டப் பட்டியலில் இடம் பெற்ற 13 புத்தகங்களில் ஒன்றாகும்.