TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 16 , 2023 339 days 287 0
  • மதுரை செங்கரும்பு, பேராவூரணி தென்னை, மூலனூர் குட்டை முருங்கை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கோரி தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் விண்ணப்பித்துள்ளது.
  • தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பானது, 3 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களைத் திருத்தியமைப்பதற்காக தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனத்தின் தலைவர் MC பந்த் தலைமையில் 19 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கற்றல் வளங்கள் குழுவினை (NSTC) அமைத்துள்ளது.
  • வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள், பயிற்சிக் கால அடிப்படையிலான பணியாளர்கள் மற்ற பிறரும் இயங்கலை மூலமாக பதிவு செய்து, உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைவதற்கான இணைய வழி அனுமதிச் சீட்டினைப் பெற உதவும் 'சுஸ்வாகதம்' என்ற இணைய தளத்தினைத் தொடங்க உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
  • இந்திய நாடானது, 2030 ஆம் ஆண்டிற்குள் அதன் ஆற்றல் வளங்களின் கலவையில் தற்போதுள்ள 6% இயற்கை எரிவாயுக் கலப்புப் பங்கினை 15% ஆக உயர்த்துவதற்கு இலட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
  • உலகில் மனித முடிக்கான (மூலப் பொருள்) மிகப்பெரிய மூல ஆதாரமாக இந்தியா உள்ளது.
    • கடந்த நிதியாண்டில், இந்தியா 169.23 மில்லியன் டாலர் மதிப்பிலான மனித முடியை ஏற்றுமதி செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்