உணவு மற்றும் வாடகை வாகனச் சேவைகளில் பணி புரிய என்று இணையதளம் மூலம் திரட்டப்படும் தொழிலாளர்களின் நலனுக்காக என்று ஒரு தனி வாரியத்தை அமைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டத்தின் பெயரை ‘விடியல் பயணம்’ எனப் பெயர் மாற்றம் செய்வதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
சென்னையில் 6.09 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப் படவுள்ள கலைஞர் நினைவு நூற்றாண்டுப் பூங்காவானது, சிங்கப்பூரின் விரிகுடா பகுதியில் உள்ள தாவரவியல் பூங்கா மற்றும் தோட்டங்களின் மாதிரியில் அமைக்கப் பட உள்ளது.
மதுரை செங்கரும்பு, பேராவூரணி தென்னை மற்றும் மூலனூர் குட்டைமுருங்கை ஆகியவற்றிற்குப் புவிசார் குறியீடு கோரி தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் விண்ணப்பித்துள்ளது.
அமெரிக்காவின் மஹுஸ் இங்க் நிறுவனத்தின் பங்குதார நிறுவனமானது லியார்னர்ஸ் கார்டெக்ஸ், சென்னையில் ஒரு நாள் அளவிலான 2023 ஆம் ஆண்டு உலக கல்வி மாநாட்டினை ஏற்பாடு செய்தது.
சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனரும் பத்ம பூஷன் விருது பெற்றவரும், சமூக சேவகருமான பிந்தேஷ்வர் பதக் சமீபத்தில் காலமானார்.
இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமானது, பொதுப் பங்கு வெளியீடுகள் நிறுத்தப் பட்ட பிறகு பங்குச் சந்தைகளில் அதன் பங்குகளைப் பட்டியலிடுவதற்காக நிர்ணயிக்கப் பட்ட ஆறு நாட்கள் அளவிலான ஒரு காலக்கெடுவினைத் தற்போது மூன்று நாட்களாகக் குறைத்துள்ளது.
பாம்போலிமில் உள்ள கோவா மருத்துவக் கல்லூரியில், நுட்பத் துணை இனப்பெருக்கத் தொழில்நுட்பம் (ART) மற்றும் கருப்பையக கருவூட்டல் (IUI) ஆகியவற்றுடன் சேர்த்து செயற்கை முறை கருத்தரித்தல் சிகிச்சையை இலவசமாக வழங்கும் இந்தியாவின் முதல் மாநிலமாக கோவா மாறியுள்ளது.
சதாராவைச் சேர்ந்த 17 வயதான அதிதி ஸ்வாமி, உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தனிநபர் இணை தங்கப் பதக்கத்தை வென்ற இளம் வயது உலக சாம்பியன் மற்றும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்தியக் கடற்படையானது, ஐக்கிய அரபு அமீரக நாட்டின் கடற்படையுடன் இணைந்து, 'சயீத் தல்வார்' என்ற இருதரப்புப் பயிற்சியின் கீழ் இருதரப்புக் கடற்படைக் கடல்சார் கூட்டாண்மைப் பயிற்சியினை மேற்கொண்டது.