தேசிய மதிப்பாய்வு மற்றும் அங்கீகாரச் சபையானது (NAAC) அதன் சமீபத்திய மதிப்பீட்டில், அண்ணாப் பல்கலைக் கழகத்திற்கு 4 மதிப்பில் 3.54 (A++) மதிப்பீட்டினை வழங்கியுள்ளது.
மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CMERI) ஆனது, CSIR Prima ET11 எனப்படுகின்ற உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது மின்சார இழுவை வாகனத்தினை (டிராக்டர்) அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகர் துலிப் தோட்டமானது ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டமாக உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இது 68 வகைகளைச் சேர்ந்த 1.6 மில்லியன் துலிப் மலர்களைக் காட்சிப்படுத்தியது.
வேகோவி எனப்படும் எடை இழப்பிற்கு உதவும் மருந்தானது மாரடைப்பு, பக்கவாதம் அல்லது இதயம் தொடர்பான ஏற்படும் உயிரிழப்பு அபாயத்தினை 20% குறைக்கிறது.