TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 26 , 2023 329 days 216 0
  • 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று ஒளிபரப்பப் பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் மிதமான வேகத்திலான தரையிறங்குச் செயல்முறையின் நேரடி ஒளிபரப்பானது, ஒரே நேரத்தில் 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்ததோடு, உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட நேரடி ஒளிபரப்பு ஆக இது மாறியது.
  • சச்சின் டெண்டுல்கர் தேர்தல் செயல்பாடுகளில் அதிக வாக்காளர் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக தேர்தல் ஆணையத்தின் (EC) 'தேசியச் சின்னமாக' அங்கீகரிக்கப் பட்டுள்ளார்.
  • இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனம் மற்றும் மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான NTPC லிமிடெட், லே நகரில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பேருந்தின் சோதனை ஓட்டத்தினைத் தொடங்கி உள்ளது.
  • கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, தேசியப் பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
  • கேலோ இந்தியா மகளிர் லீக் போட்டியானது அஸ்மிதா மகளிர் லீக் என மறுபெயரிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்