2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று ஒளிபரப்பப் பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் மிதமான வேகத்திலான தரையிறங்குச் செயல்முறையின் நேரடி ஒளிபரப்பானது, ஒரே நேரத்தில் 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்ததோடு, உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட நேரடி ஒளிபரப்பு ஆக இது மாறியது.
சச்சின் டெண்டுல்கர் தேர்தல் செயல்பாடுகளில் அதிக வாக்காளர் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக தேர்தல் ஆணையத்தின் (EC) 'தேசியச் சின்னமாக' அங்கீகரிக்கப் பட்டுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனம் மற்றும் மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான NTPC லிமிடெட், லே நகரில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பேருந்தின் சோதனை ஓட்டத்தினைத் தொடங்கி உள்ளது.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, தேசியப் பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
கேலோ இந்தியா மகளிர் லீக் போட்டியானது அஸ்மிதா மகளிர் லீக் என மறுபெயரிடப் பட்டுள்ளது.