சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேசக் கணிதத் துறை சார்ந்தத் திறனை வெளிப்படுத்துவதற்கான ஒலிம்பியாட் போட்டியில் திருப்பதியைச் சேர்ந்த ராஜா அனிருத் என்பவர் வெள்ளிப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
அசாமில் அமைந்துள்ள கௌஹாத்தியின் லோக்ப்ரியா கோபிநாத் பர்தோலாய் என்ற சர்வதேச விமான நிலையமானது, வடகிழக்கு மாநிலங்களில் டிஜி யாத்ரா என்ற ஒரு வசதியினைப் பெற்ற முதல் விமான நிலையமாக மாறியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில், பிரத்தியேக சுயச் சார்பு பல்கலைக் கழகத் தர நிர்ணய முறையினை உருவாக்குவதற்கு அதன் உறுப்பினர் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
தற்போதைய இந்த தர நிர்ணய முறையானது நியாயமான தகவல்களை அளிக்கத் தவறியதாக விமர்சனங்களை எதிர்கொண்டதையடுத்து, அதிலுள்ளக் குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இம்முடிவானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
சர்வதேச நாய்கள் தினமானது, ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.