TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 29 , 2023 326 days 211 0
  • பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, மத வேறுபாடுகளால் ஏற்படும் வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்காக அமைக்கப் பட்ட நீதிபதி K. சந்துரு குழு செயலபடுவதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வகுத்து உள்ளது.
  • சத்தீஸ்கரில் உள்ள தேசியக் கனிம மேம்பாட்டு கழகத்தின் நாகர்னார் எஃகு ஆலை என்பது அதன் தயாரிப்புப் பொருளான, உயர்ந்தபட்ச வெப்பநிலையில் அழுத்தப்பட்ட எஃகு தகடுகளை ஒன்பது நாட்களில் தயாரித்துச் சாதனை படைத்துள்ளது.
  • இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி கேரளாவின் திருவனந்தபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது.
  • உலக மல்யுத்த நிர்வாகக் குழுவானது இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் (WFI) தலைவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தத் தலைவருக்கான அமைப்பின் தேர்தலை நடத்தாமல் இருந்தததற்காக அந்த அமைப்பின் அங்கீகாரத்தினை ரத்து செய்துள்ளது.
  • பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பானது, ASTRA எனப்படும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கண்ணுக்குப் புலப்படாத நீண்ட தொலைவு செயல்பாட்டு வரம்பு கொண்ட (BVR) ஏவுகணையின் பரிசோதனையினை வெற்றி கரமாக மேற்கொண்டது.
  • ஆயுஷ்மான் பாரத் எண்ணிமத் திட்டத்தின் (ABDM) சிறு மருத்துவத் தளங்கள் என்ற ஒரு திட்டத்தைச் செயல்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலமாக மிசோரம் மாறியுள்ளது.
  • ஐரோப்பாவின் நரி உரோம உற்பத்தியில் முன்னணியில் விளங்கும் நாடான பின்லாந்து, உரோமப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக என்று 120,000 நரிகளையும் மிங்க் எனப்படும் ஒருவகை கீரி இனங்களையும் கொல்லத் தொடங்கி உள்ளது.
  • PDF எனும் ஆவண வாசிப்பு மென்பொருளைக் கண்டுபிடித்தவரும் அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான ஜான் வார்னாக் சமீபத்தில் காலமானார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்