சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பதற்காக மாநில அலுவல் மொழி (சட்டமன்ற) ஆணையத்திற்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுக்கான நெறிமுறைகள் (AI) குறித்த யுனெஸ்கோ அமைப்பின் பரிந்துரையைச் செயல்படுத்துவதற்காக வேண்டி தெலுங்கானா மாநில அரசு மற்றும் யுனெஸ்கோ அமைப்பு ஆகியவை இணைந்து செயல்பட உள்ளன.
பாரத மிகு மின் நிறுவனமானது (BHEL) அனல் மின் நிலையங்களில் இருந்து வெளிவரும் NOx உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்காக வேண்டி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட SCR வினையூக்கிகளின் முதல் தொகுதியினை வெற்றிகரமாகத் தயாரித்துள்ளது.
HDFC வங்கி மற்றும் மெரியோட் பான்வாய் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தியாவில் முதல் முறையாக இணை நிறுவனத் தங்கும் விடுதி கடன் அட்டை - 'மெரியோட் பான்வாய் HDFC வங்கி கடன் அட்டையினை' அறிமுகப் படுத்தியுள்ளன.
மத்திய ஆலோசனைக் குழுவானது உணவு வணிக நிறுவனங்களுக்கு (FBOs) தற்போது வழங்கப் பட்டு வரும் ஓராண்டு உரிமத்திற்குப் பதிலாக ஐந்து ஆண்டுகள் வரை உரிமம் வழங்கப்படலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று தேசிய சிறுதொழில் தினம் அனுசரிக்கப் படுகிறது.