TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 31 , 2023 324 days 221 0
  • டென்மார்க்கில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு BWF உலகப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியப் பேட்மிண்டன் வீரர் H.S. பிரணாய் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
    • இதன் மூலம் BWF உலகப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவில் பதக்கம் வென்ற ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையினைப் பிரணாய் பெற்றுள்ளார்.
  • கொல்கத்தா நகரமானது டெல்லி மற்றும் புனே ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக, காற்றுத் தர முன்னெச்சரிக்கை அமைப்பை (AQEWS) பெற உள்ள 3வது இந்திய நகரமாக மாறியுள்ளது.
    • இது இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தினால் (IITM) உருவாக்கப் பட்டது.
  • ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலகத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்