இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிரிசேனாவின் முன்னாள் செயலாளர் ஆஸ்டின் பெர்னான்டோ, இந்தியாவிற்கான இலங்கையின் அடுத்தத் தூதராக (High Commission of India) நியமிக்கப்பட்டுள்ளார். சித்தரங்கனி வகிஸ்வாராவினை அடுத்து இவர் பொறுப்பேற்க உள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் சுகாதாரத் துறை திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (Memorandum of Understanding - MoU) கையெழுத்திட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு (Batticola) மாவட்டத்தில் 3,400 கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன.
நாட்டின் பெரிய கடன் அளிக்கும் வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி (State Bank of India - SBI) தேசிய அளவிலான கிசான் மேளாவினை ஏற்பாடு செய்துள்ளது. கிசான் மேளா, விவசாயிகளை சென்றடையும் வகையில் நிதிநிலைக் கல்வியறிவை அளிப்பதற்கான திட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.