"இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் சோதனை முறை திட்டங்கள்" என்ற தலைப்பிலான மாநாடானது புது டெல்லியில் நடைபெற்றது.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள சர்வதேசக் கப்பல் போக்குவரத்து முனையம் ஆனது சமீபத்தில் திறக்கப்பட்டது.
இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கப்பல் பயணப் போக்குவரத்து சுற்றுலாவிற்கான ஒரு முக்கிய நுழைவாயிலாக இது இருக்கும்.
தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் (TDB) ஆனது, “சுற்றுச்சூழலுக்கு உகந்த 1.5V AA அளவு கற்றாழையினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மின் கலன்களின் வணிக மயமாக்கல் திட்டத்தினை ஆதரிக்கச் செய்யும் விதமாக லக்னோவில் அமைந்துள்ள ஒரு புத்தொழில் நிறுவனமான ஆலோ எசெல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.